''ஜெனரல் எலக்டிரிக் நிறுவனம் இந்தியாவில் போர் விமான எஞ்சின்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் ஒரு புதிய மைல்கல்..''- பிரதமர் மோடி..!

0 1252

அமெரிக்காவின் ஜெனரல் எலக்டிரிக் நிறுவனம் இந்தியாவில் போர் விமான எஞ்சின்கள் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டது நாட்டின் பாதுகாப்புத்துறையில் புதிய மைல்கல் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

வாஷிங்டன் டி.சி.யில் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர், கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பெரும் முதலீடுகளை செய்வதாக அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டி, இது இந்தியாவில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உதவும் என்றும் தெரிவித்தார்.

இந்திய அரசின் உதவியுடன், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவப்படும் என்றும் பிரதமர் உறுதி கூறினார்.

அமெரிக்க பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி எகிப்து நாட்டிற்கு புறப்பட்டார். இந்தியா - எகிப்து இடையிலான பன்முக கூட்டாண்மைக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் வகையில் அதிபர் எல் சிசி உடனான பேச்சுவார்த்தை அமையும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments