திண்டுக்கல் அருகே மர்ம கும்பலால் தாய் ,மகள் வெட்டி படுகொலை

திண்டுக்கல் அருகே மர்ம கும்பலால் தாய் ,மகள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலனியில் வசித்து வருபவர் அய்யனார். அவரது மனைவி வள்ளியம்மாள் , மகள் ராசாத்தி.ராசாத்தியின் கணவர் லட்சுமணன் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
அருகில் உள்ள இரும்பு ஆலையில் பணி புரிந்து வரும் இவர்கள், வேலைமுடிந்து வீட்டில் இருந்தபோது , மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் வீடுபுகுந்து தாயையும் மகளையும் சரமாரியாக தாக்கியது. இதில் காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தடுக்க வந்த மருமகன் காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments