சிறையிலிருந்து பிணையில் வெளிவந்த கைதியை மீண்டும் கைது செய்ய முயற்சித்த போலீசிடமிருந்து கணவனை போராடி மீட்ட மனைவி..!

செங்கல்பட்டு சிறையிலிருந்து பிணையில் வெளிவந்த கைதியை மீண்டும் கைது செய்ய முயற்சித்த போலீசாரிடம் மனைவி போராடி மீட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சங்கராபுரத்தை சேர்ந்த மோகன் என்பவர் ஏகாட்டூரில் உள்ள பி.ஜி. தனியார் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கும் விடுதிகளில் சென்று மடிக்கணினி மற்றும் செல்போன்களைத் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரில் விசாரணை நடத்திய போலீசார், மோகனை கைது செய்து செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நீதிமன்ற ஜாமினில் வெளியே வந்த அவரை போலீசார் மீண்டும் கைது செய்ய முயன்றனர்.
அப்போது அங்கிருந்த வழக்கறிஞரும் பொதுமக்களும் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மோகனை அழைத்துக் கொண்டு அவரது மனைவி வேறொரு காரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
Comments