சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆள் மாறாட்டம்.. போலி பத்திரப் பதிவு செய்ய வந்தவர்களில் ஒருவர் பிடிபட்ட நிலையில் 6 பேர் தப்பியோட்டம்..!

0 2337

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆள் மாறாட்டம் செய்து பத்திரப் பதிவு செய்ய வந்தவர்களில் ஒருவர் பிடிபட்ட நிலையில் 6 பேர் தப்பி ஓடி விட்டனர்.

இருங்களூர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் தனது நிலத்தை காஜா நகர் சங்கர் என்பவருக்கு பவர் ஏஜண்ட் எழுதிக் கொடுப்பாக 6 பேருடன் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அப்போது சார் பதிவாளர் கோகிலா, ஆரோக்கியசாமியின் ஆதார் அட்டையைச் சரி பார்க்கும் போது, அதில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அப்போது ஆரோக்கியசாமி உடன் வந்த 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், தகவலறிந்த மணச்சநல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் ஆரோக்கியசாமி இல்லை என்பதும், அவரது பெயர் சண்முக சுந்தரம் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சண்முக சுந்தரத்திடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் தப்பி ஓடிய 6 பேரைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments