அண்ணாமலையின் கருத்தும் என்னோட கருத்தும் ஒத்துப்போகிறது... வியாபாரம் ஆகாத மதுக்கடைகள் மூடலா? - சீமான் கேள்வி

அண்ணாமலையின் கருத்தும் என்னோட கருத்தும் ஒத்துப்போகிறது... வியாபாரம் ஆகாத மதுக்கடைகள் மூடலா? - சீமான் கேள்வி
தான் விசாரித்த வரையில் சரியாக வியாபாரம் ஆகாத டாஸ்மாக் கடைகளை மட்டுமே அரசு மூடி இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
அருப்புக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து மதுபான கடைகளையும் மூட வேண்டும் என்பதுதான் தங்களது நிலைப்பாடு என்றார்.
ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம் என்று கூறுவதால் தன்னுடைய கருத்தும் பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலையின் கருத்தும் ஒத்துப் போவதாக அவர் கூறினார்.
செந்தில் பாலாஜி வாய் திறந்து பேசினால் தாம் சிக்கலுக்கு ஆளாகக் கூடும் என்பதால் தான் அவரை முதலமைச்சர் ஸ்டாலின் கவனிக்கொள்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சீமான் தெரிவித்தார்.
Comments