தினேஷின் தீராத தொல்லைகள்…. பிக் பாஸ் நடிகை கண்ணீர்... விழிபிதுங்கும் போலீசார்..!

0 6049

வாட்ஸ் அப் மூலம் ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி தீராத தொல்லை கொடுப்பதாக சின்னத்திரை நடிகர் தினேஷ் மீது பிக் பாஸ் நடிகை ரட்சிதா மகாலட்சுமி காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்தார். சின்னத்திரை நடிகர்களின் குடும்ப விவகாரங்களால் மாங்காடு போலீசார் விழிபிதுங்கி வருகின்றனர்.

சின்னத்திரை சீரியல்களில் இணைந்து நடித்ததால் காதலில் விழுந்து பெற்றோரும் உற்றாரும் வாழ்த்த திருமணம் செய்து கொண்டவர்கள் நடிகர் தினேஷ், நடிகை ரட்சிதா மகாலெட்சுமி ஜோடி..!

பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் இந்த காதல் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சின்னத்திரை தொடர்கள், பிக்பாஸ் என்று கலக்கி வரும் நடிகை ரட்சிதா மகாலட்சுமி அய்யப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மாங்காடு காவல் நிலையத்துக்கு தனது வழக்கறிஞர்களுடன் வந்த ரட்சிதா, தனது கணவரும் நடிகருமான தினேஷின் தீராத தொல்லைகள் குறித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் கருத்து வேறுபாடு காரணமாக தாங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், இரவு நேரம் தன்னை ஆபாசமாக திட்டியும் , அவதூறாக சித்தரித்தும் வாட்ஸ் அப்பில் தினேஷ் குறுந்தகவல் அனுப்புவதாகவும், போதையில் தனக்கு செல்போன் மூலம் அழைத்து, கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் அவரது தொல்லையால் நிம்மதி இழந்து தவிப்பதாகவும் கண்ணீர் மல்க புகார் தெரிவித்ததாக கூறப்படுகின்றது

இதையடுத்து தினேஷை போலீசார் விசாரணைக்கு வரவழைத்தனர். போலீசாரிடம் உள் நோக்கத்தோடு தன் மீது ரட்சிதா புகார் அளித்திருப்பதாகவும், அவர் விரும்பினால் நீதிமன்றத்தை நாடி விவாகரத்து பெற்றுக் கொள்ளட்டும் என்ற தினேஷ், இனி அவருக்கு தொல்லை கொடுக்க மாட்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த நடிகை ரட்சிதாவை படம் பிடிக்க கூடாது என்று அவருடன் வந்தவர் தடுத்தார்.

ஏற்கனவே சின்னத்திரை காதல் தம்பதிகளான அர்னாவ், திவ்யா ஜோடிகளின் பதிலுக்கு பதில் புகார்களால் நொந்து போயுள்ள மாங்காடு போலீசார், தற்போது தினேஷ், ரட்சிதா ஜோடிகளின் புகாரால் விழிபிதுங்கி போயுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments