ரஜினி, விஜய், அஜீத்தா.. அரசியலுக்கு வரும் நடிகர்கள் தமிழகத்தின் சாபக்கேடு ..! கொந்தளித்த திருமாவளவன்..!

0 4278
ரஜினி, விஜய், அஜீத்தா.. அரசியலுக்கு வரும் நடிகர்கள் தமிழகத்தின் சாபக்கேடு ..! கொந்தளித்த திருமாவளவன்..!

சினிமா பாப்புலாரிட்டி இருந்தால் போதும் முதலமைச்சராகிவிடலாம் என்ற நினைப்பில்  நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ் நாட்டின் சாபக்கேடாக இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதில் அளித்தார். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் சினிமாகாரன், சினிமா பாப்புலாரிட்டி இருந்தால் போதும் முதல் அமைச்சராகிவிடலாம் என்ற நினைப்பில் அரசியலுக்கு வரும் சாபக்கேடு இருப்பதாக அவர் தெரிவித்தார்

 புதிதாக அரசியலுக்கு வருபவர்களை கண்டு இப்போது உள்ள கட்சிகள் பதற்றப்படுகின்றவா என்று கேட்டதும் உணர்ச்சிவசப்பட்ட திருமாவளவன், மீடியாவில் உள்ளவர்கள் தான் நடிகர்களை தூக்கிவிடுவதாகவும், முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அதனை செய்ய வேண்டாம் என்றும் விஜய் மட்டுமில்லாமல் அனைத்து நடிகர்களையும் கூறுவதாக திருமாவளவன் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments