அஸ்ஸாமில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு... ரெட்அலர்ட் விடுத்த இந்திய வானிலை மையம்

0 1482

அஸ்ஸாமில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் ரெட்அலர்ட் விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அஸ்ஸாமின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திராவில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்வதால், பல்லாயிரக்கணக்கான மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளம் சூழந்த் பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை, படகு மூலம் மீட்கும் பணிகளும் துரிதமாக நடைபெறுகிறது. இதற்கிடையே, நாளை மிக மிக பலத்த மழை பெய்யும் என்றும், அசாம் மாநில மக்களை வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments