காதலியை கொன்று குக்கரில் வேக வைத்து நாய்க்கு உணவாக்கிய சைக்கோ.!

0 5337

மும்பையில், இளம்பெண்ணை கண்டந்துண்டமாக வெட்டி படுகொலை செய்து, குக்கரில் வேகவைத்து நாய்க்கு உணவாக போட்டதாக கூறப்படும், எய்ட்ஸ் நோயாளியான காதலன் கைது செய்யப்பட்டுள்ளான்..

காதலனால், கண்டந்துண்டமாக வெட்டப்பட்டு குக்கரில் வேகவைக்கப்பட்ட 32 வயது இளம்பெண் சரஸ்வதி வைத்யா இவர் தான்......

மும்பை மீரா ரோடு பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில், 7ஆவது தளத்தில் வசித்து வந்த மானோஜ் சானே... கடை ஒன்றில் பணியாற்றிய சரஸ்வதியை வீட்டு வேலைக்கு என்று அழைத்துச்சென்று, காதல் வலையில் வீழ்த்தி அவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது. தொழில் நஷ்டம் மற்றும் ரேஷன் கடையில் பார்த்த வேலையும் பறிபோனதால், விரக்தியுடன் காணப்பட்ட மனோஜ், சில தினங்களாக காதலி சரஸ்வதி வைத்யாவை அடித்து உதைத்து வந்ததாகவும், தற்போது அவனது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார், குடியிருப்பின் நுழைவுவாயில் அருகே, தெருநாய்களுக்கு, வேகவைத்த இறைச்சியை போட்டுக் கொண்டிருந்த மனோஜை மடக்கிப் பிடித்த போலீசார் அவனை அழைத்துச் சென்று வீட்டைத் திறந்து பார்த்தபோது, வீடெங்கும் சடலத்துண்டுகள் வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்துபோயினர்..

விசாரணையில், கடந்த 4ஆம் சரஸ்வதியுடனான வாய் தகராறு முற்றி, அடித்துக் கொன்றதாக தெரிவித்த அவன், கத்தி, சிறிய ரம்பம், ஆக்சா பிளேடு உள்ளிட்டவற்றை கொண்டு, சடலத்தை கண்டந்துண்டமாக அறுத்து உடல் உறுப்புகளை ஃபிரிடஜில் அடைத்து வைத்ததாகவும், சில உடல் உறுப்புகளை மிக்சியில் அரைத்து, பாலிதீன் கவர்களில் கட்டி வெளியில் வீசியதாகவும், மேலும் சில உறுப்புகளை குக்கரில் வேகவைத்து, தெருநாய்களுக்குப் போட்டதாக, எவ்வித சலனமும் இன்றி கூறியிருக்கிறான் மனோஜ் .

தெருநாய்களுக்கு பிஸ்கட் கூட போடாத மனோஜ், வேகவைத்த கறித் துண்டுகளை போட்டதாலும், அவனது வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றத்தால் சந்தேகம் அடைந்து, அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்... அவனை 16ஆம் தேதி வரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், தனக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாக கூறிய சைக்கோ கொலைகாரன் மனோஜ் சானே, தாம் இறந்துவிட்டால், தம்மால் எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளான சரஸ்வதி வைத்யா என்ன செய்வார் ? என நினைத்து, கொன்றுவிட்டதாக, வினோத வாக்குமூலம் அளித்திருப்பதாக, மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தங்கள் சகோதரியை மனோஜ் திருமணம் செய்து கொண்டதாகவும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால் இருவரும் திருமண மான தகவலை வெளியே சொல்லாமல் மறைத்துவிட்டதாக சரஸ்வதியின் சகோதரிகள் கூறி உள்ளனர். ((GFX-OUT))

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments