ஹைதி நாட்டின் பிரதமர் ஜாக் கே லஃபோண்டன்ட் திடீர் ராஜினாமா

0 633

ஹைதி (( Haiti)) நாட்டில் எரிபொருள் விலையை உயர்த்தும் அரசின் முடிவை எதிர்த்து வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து, பிரதமர் ஜாக் கே லஃபோண்டன்ட் ((Jack Guy Lafontant )) பதவி விலகியுள்ளார்.

கரீபியன் நாடான ஹைதியில், எரிபொருள்களின் விலையை 51 சதவீதம் வரை உயர்த்த அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்தன. இதில் 7 பேர் கொல்லப் பட்டனர். ஏராளமானோர் படுகாயமுற்றனர். நாடு முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ஹைதியில் பிரதமர் ஜாக் கே லஃபோண்டன்ட், பதவி விலகியுள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் ஜோவ்னெல் மோயிசிடம் ((President Jovenel Moise)) ஜாக் அளித்துள்ளார். இந்த தகவலை அதிபர் மோயிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உறுதி செய்துள்ளார். புதிய பிரதமரை தேர்வு செய்வது குறித்து நடைமுறைகள் விரைவில் தொடங்கி, முடிவெடுக்கப்படும் என்று அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments