முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 59-வது நினைவு தினம்... பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பதிவில் மரியாதை...!

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 59-வது நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். சாரல் மழைக்கு மத்தியிலும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
Comments