நடுவானில் விமானத்தின் அவசர கால கதவை திறந்து காத்து வாங்கிய பயணி....!

0 1932

194 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஆசியானா ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசரகாலக் கதவை பயணி ஒருவர் திடீரெனத் திறந்ததால், பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.

தென் கொரியாவில் ஜேஜூ என்ற தீவில் இருந்து அந்த விமானம் டாயேஜூ என்ற நகருக்கு பறந்துக் கொண்டிருந்தது.

ஒருமணி நேரப்பயணத்திற்குப் பின் தரையிறங்குவதற்காக 700 அடி உயரத்தில் விமானம் பறந்துக் கொண்டிருந்தபோது பயணி கதவைத் திறந்துவிட்டார்.

இதையடுத்து அவரை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பிரிவினர் கைது செய்தனர்.விமானத்தில் பயணிகள் எடுத்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments