நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - அமைச்சர் ராஜ்நாத்சிங்!

0 717

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

970 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அக்கட்டிடத்தை வருகிற 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். ஆனால் அக்கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட சுமார் 20 எதிர்க்கட்சிகள், விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

தெலுங்குதேசம் உள்ளிட்ட 25 கட்சிகள் விழாவில் கலந்து கொள்ளவுள்ளன. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், புதிய நாடாளுமன்ற கட்டிடம், ஜனநாயகத்தின் அடையாளம் என்றும், அனைத்து இந்தியர்களின் விருப்பம் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments