ரூ.42,78,768 மதிப்பிலான 685.7 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி கேப்ஸ்யூல்களில் அடைத்து கடத்தல்..!

திரைப்படங்களில் வருவதை போல, தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி கேப்ஸ்யூல்களில் அடைத்து பெருங்குடலில் மறைத்து கடத்திவந்த ஆண் பயணியை ஹைதராபாத் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மஸ்க்கட்டிலிருந்து ஹைதராபாத் விமான நிலையம் வந்த அந்த பயணியிடம் இருந்து 42 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 685 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள பயணியிடம் சுங்க வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments