காலிஸ்தான் தீவிரவாதிகளால் தொடர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு...!

காலிஸ்தான் தீவிரவாதிகளால் தொடர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 55 வீரர்கள் மானுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கின்றனர்.
காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பகவந்த் மானின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து உளவுத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் மானுக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Comments