''மக்கள் பேராபத்திற்கு ஆளாகவோ, கொல்லப்படவோ செயற்கை நுண்ணறிவு காரணமாகலாம்..'' கூகுள் முன்னாள் தலைமை செயல் அதிகாரி எரிக் ஷமிட் எச்சரிக்கை...!

0 3627

எதிர்காலத்தில் மக்கள் பேராபத்திற்கு ஆளாகவோ, கொல்லப்படவோ ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு காரணமாகலாம் என கூகுள் முன்னாள் தலைமை செயல் அதிகாரி எரிக் ஷமிட் எச்சரித்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றி தற்போது பேசுவது கற்பனை கதை போல தோன்றினாலும், எதிர்காலத்தில் உண்மையாக வாய்ப்புள்ளதாக கவலை தெரிவித்தார்.

தீயவர்கள் இதனை தவறாக பயன்படுத்தாமல் தடுக்க ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

எலான் மஸ்க் உள்ளிட்டோரும் செயற்கை நுண்ணறிவின் விளைவுகள் பற்றி எச்சரித்திருந்தாலும், அதன் தொழில்நுட்ப முன்னேற்றங்களை பில் கேட்ஸ் போன்றோர் பாராட்டி வருகின்றனர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments