கண்ணிவெடித் தாக்குதலில் இரு கால்களை இழந்த நபர் 29,030 அடி உயர எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை....!

0 1041

கண்ணிவெடித் தாக்குதலில் இரு கால்களையும் இழந்த நபர், 29 ஆயிரம் அடி உயர எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

நேபாளத்தைச் சேர்ந்த ஹரி புத்த மகர், 20 வயதில் பிரிட்டன் ராணுவத்தில் இணைந்தார். ஆப்கானிஸ்தானில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்ணிவெடி தாக்குதலில் இரு கால்களையும் இழந்தார்.

மனம் தளர்ந்து முடங்கிவிடாத புத்த மகர், மலையேற்றம், ஸ்கை டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளில் தன்னை ஈடுபடுத்திவந்தார்.

ஐரோப்பாவின் உயரமான மாண்ட் பிளாங்க் சிகரம், ஆப்ரிக்க கண்டத்தின் உயரமான கிளிமஞ்சரோ போன்றவற்றில் ஏறியுள்ள புத்த மகர், தற்போது எவரஸ்ட் சிகரத்திலும் ஏறி சாதனை படைத்துள்ளார்.

முட்டிக்கு மேல் இரு கால்களும் அகற்றப்பட்டவர் எவரெஸ்ட் சிகரம் ஏறுவது இதுவே முதல்முறை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments