ரூ.2000 பணத் தாள்களை மாற்ற வேறு வழிகளை நாடும் மக்கள்... 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு ரூ.2000 நீட்டும் வாடிக்கையாளர்கள்..!

0 1690

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கு பதிலாக பெட்ரோல் நிலையங்களில் மக்கள் மாற்றி வருகின்றனர்.

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தந்து மாற்றி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்ட போதிலும், அதனை பெட்ரோல் நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் தந்து மக்கள் மாற்றி வருகின்றனர்.

சென்னையில் சில பெட்ரோல் நிலையங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுகிறது. அதேவேளை, சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படாது எனவும், வங்கியில் கொடுத்து மாற்றி கொள்ளவும் எனவும் பதாகை வைத்துள்ளனர்.

பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு 2 ஆயிரம் ரூபாயை தாளை தருவதால் சில்லறை தட்டுப்பாடு ஏற்படுவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments