சென்னையில் தான் தகனம் செய்ய வேண்டும்..! சரத் பாபுவின் கடைசி ஆசையை நிறைவேற்றிய உடன்பிறந்தோர்..!!

0 1970

தமிழ் திரையுலகம் தான் அடையாளம் கொடுத்தது என்பதால் தமது இறுதிச் சடங்கை சென்னையில் செய்ய வேண்டும் என்ற நடிகர் சரத் பாபுவின் கடைசி ஆசையை அவரது 12 சகோதர, சகோதரிகள் நிறைவேற்றி உள்ளனர்.

நடிகர் சரத் பாபுவுக்கு இறுதிச் சடங்கு செய்யும் இவர் அவரது 5-வது தம்பி கோவிந்த். மொத்தம் 7 சகோதரர்கள், 5 சகோதரிகளுடன் பிறந்த சரத் பாபுவுக்கு சொந்த ஊர் ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம்.

எனினும் தமக்கு அடையாளம் கொடுத்தது தமிழ் சினிமாவும் தமிழ் மக்களும் தான் என்பதால், தாம் இறந்த பின் இறுதிச் சடங்கை சென்னையில் நடத்த வேண்டும் என்று சரத் பாபு விருப்பம் தெரிவித்து இருந்ததாக அவரது சகோதரி சரிதா கூறினார்.

அண்ணனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஐதராபாத்தில் இருந்து 600 கிலோ மீட்டர் தூரம் தாண்டி சரத் பாபுவின் உடலை சென்னை வரை கொண்டு வந்ததாக இறுதிச் சடங்கு செய்த சகோதரர் கோவிந்த் தெரிவித்தார்.

தங்கள் அப்பாவா இறந்த பிறகு தந்தை ஸ்தானத்தில் இருந்தவர் சரத் பாபு தான் என்று அவரது சகோதரர்கள் கூறினர்.

சரத் பாபுவுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர்கள் அனைவரும் அவர் எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவர், சிரித்த முகத்துடன் எப்போதும் இருந்தவர் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments