மறைந்த செந்தாழம் பூவிற்கு பிரியா விடையளிப்பு.. "இந்த நாளை குறித்து வைக்கிறோம் அசோக்"

0 1006

ஹைதாராபாத்தில் காலமான நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னை எடுத்துவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், பார்த்திபன், சூர்யா, கார்த்திக் உள்ளிட்ட திரைபிரபலங்களும், நண்பர்கள், பொதுமக்கள்  அஞ்சலி செலுத்தினர்.

கதாநாயகனாகவும், குணசித்திர வேடத்திலும் சுமார் 200 படங்களில் நடித்திருந்த சரத்பாபு உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் நேற்று காலமானார். இதனைத்தொடர்ந்து, அவரது உடல் சென்னை தியாகராயநகர் நகரிலுள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

சரத்பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், அருமையான மனிதர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார் என சரத்பாபுவிற்கு புகழாரம் சூட்டினார்.

சரத்பாபு உடலுக்கு சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திய நடிகர் பார்த்திபன் நல்ல ஒரு மனிதரை நல்ல ஒரு கலைஞனை இழந்துவிட்டோம் என புகழராம் சூட்டினார்.

அஞ்சலி செலுத்திய நடிகை சுஹாசினி, எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லாதவர் சரத்பாபு என கூறினார்.

நடிகர்கள் சூர்யா, கார்த்தி, YG மகேந்திரன், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, நடிகை பூர்ணிமா உள்பட ஏராளமான திரைபிரபலங்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

தியாகராயர் நகரிலுள்ள அவரது வீட்டிலிருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலம் கிண்டி மின்மயானத்திற்கு சென்றடைந்தது. அங்கு குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்த பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments