அனைத்து தனியார் பள்ளி மாணவர்களும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்...!

0 789

2024-25ஆம் கல்வியாண்டில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், தனியார் பள்ளிகள் தமிழை கட்டாய பாடமாக்க மறுத்து காலம் தாழ்த்தி வந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்கி மீண்டும் அரசு உத்தரவிட்டது.

2015 ஆம் ஆண்டு ஒன்றாம் வகுப்பு பயின்ற மாணவர்கள், அடுத்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பை எட்ட உள்ள நிலையில் சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் தமிழ் பாடத் தேர்வை எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கென முறையான பாடத்திட்டத்தை தயார் செய்து ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும் தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments