தமிழ்நாட்டில் சட்ட விரோத பார்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை தீவிரம்..

0 1239

தஞ்சாவூர் அருகே மதுபானம் குடித்து இரண்டு பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் பார்களை மூடும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள ஆரம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த இரண்டு பார்கள் கண்டறியப்பட்டு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் சுண்ணாம்பு குளம் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த மற்றொரு பாருக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் அறந்தாங்கி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் இயங்கி வந்த 18 பார்கள் கண்டறியப்பட்டு சீலிடப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments