துக்க நிகழ்ச்சியின் போது, இரு கிராமத்தினரிடையே கடும் மோதல்..!

0 2188

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே, துக்க நிகழ்ச்சியின் போது, இரு கிராமத்தினரிடையே கடும் மோதல் வெடித்தது. புதுகோட்டை பகுதியை சேர்ந்த எமநாயகம் என்பவர் ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனது மூத்த மகளின் வீட்டில் வசித்து வந்தார்.

உடல்நிலை சரியில்லாத நிலையில் கடந்த 20 ஆம் தேதி எமநாயகம் உயிரிழந்தார். இதையடுத்து அவரது சொந்த ஊரான புதுகோட்டையில் நேற்று மாலை இறுதி சடங்கு நிகழ்ச்சி நடந்தது.

அப்போது மதுபோதையில் புதுகோட்டையை சேர்ந்த சின்னதுரை என்பவர், மாம்பாக்கத்தை சேர்ந்த பாபு என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இருதரப்பினரிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி, கைகலப்பாக மாறிய நிலையில், புதுகோட்டை பகுதியை சேர்ந்தவர்கள், மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்களை கருங்கல், செங்கல், கட்டைகளை கொண்டு தாக்கினர்.

இந்த மோதலில், மாம்பாக்கத்தை சேர்ந்த 4 பேருக்கு காயம் ஏற்பட்டு, செய்யார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், பெரணமல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments