இதுல்லாம் பெண்ணா ..? இல்லை கொடூர பேயா..? பாவம் மாற்றுத்திறனாளி..!

0 1750
இதுல்லாம் பெண்ணா ..? இல்லை கொடூர பேயா..? பாவம் மாற்றுத்திறனாளி..!

கொடைரோடு அருகே மாற்றுத் திறளாளி இளைஞரை தாக்கிய உறவுக்கார பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை , கொடைரோடு அருகே மாவூத்தன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா, இவரது கணவரின் அண்ணன் மகன், மணிகண்டன் என்பவர் மாற்றுத்திறனாளி. இவரால் பேசவோ, நடக்கவோ முடியாது

அங்குள்ள காப்பகத்தில் பாதுகாப்பாக இருந்த, மணிகண்டனை வீட்டுக்கு அழைத்துச்சென்ற சந்திரா, அவர் வாங்கும் மாதந்திர உதவித் தொகைக்காகவும், மணிகண்டன் பெயரில் உள்ள காலி இடத்தை அபகரிக்கவும், திட்டமிட்டதாக கூறப்படுகின்றது.

இதனால் மணிகண்டனை தினந்தோறும், குச்சியால் அடித்து சித்திரவதை செய்வதை வாடிக்கையாக செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று மணிகண்டனுக்கு, சந்திரா செய்த சித்ரவதையை இப்பகுதியை சேர்ந்த இந்து முன்னனி இளைஞர்கள் படம் பிடித்து உள்ளனர்.

மாற்றுத்திறனாளிக்கு நடக்கின்ற கொடுமை தொடர்பாக அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் வீடியோவுடன் அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட சந்திரா குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments