மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை சமாதானப்படுத்திய பால் வியாபாரி படுகொலை...!

0 2484

நள்ளிரவில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை சமாதானப்படுத்திய பால் வியாபாரி தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகிலுள்ள சித்தோடு கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி சேட்டு, அதிகாலை நேரத்தில் விளை கிராமத்தில் பால் கறப்பதால் அங்குள்ள நாகாத்தம்மன் கோயிலில் படுத்து உறங்குவது வழக்கமென கூறப்படுகிறது.

வியாழக்கிழமை இரவில், அதே கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார், சிவசங்கர் ஆகியோர் மதுபோதையில் கோயில் அருகே தகராறு செய்த போது அவர்களை சேட்டு சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து மதுபோதையில் அங்கு வந்த சிவசங்கர், கோயிலில் படுத்திருந்த சேட்டின் மீது அருகில் இருந்த கல்லை தூக்கி தலையில் போட்டதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த சேட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த ஆரணி போலீசார், ஏரியின் நடுவில் முட்புதருக்குள் பதுங்கிருந்த சிவசங்கரை பரிசலில் சென்று கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments