மும்பை வந்த விமானத்தில் கதவைத் திறந்து வெளியே விடுமாறு கலாட்டா.. நடுவானில் பதற்றமடைந்த பயணி..!

0 1774

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் முதன் முறையாக பயணித்த ஒருவருக்கு நடுவானில் பேனிக் அட்டாக் எனப்படும் பயணப் பதற்றம் ஏற்பட்டு பெரும் ரகளையில் ஈடுபட்டார்.

நெவார்க் நகரில் இருந்து புறப்பட்ட விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சில மணி நேரத்தில், தனது மனைவியுடன் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு பதற்றம் பற்றிக் கொண்டது.

கதவை திறந்து தம்மை வெளியே விடுமாறு ரகளையில் ஈடுபட்ட நபர், விமான சிப்பந்திகளை நோக்கி கத்திக் கூச்சலிட்டுள்ளார். தனது மனைவியின் கழுத்தை நெறிக்கவும் அவர் முயன்றதாக தெரிகிறது.

ஒருவழியாக விமானத்திலிருந்த மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுத்து அவரை அமைதிப்படுத்தினர். அதன்பிறகே விமானத்தில் இயல்பு நிலை திரும்பியது. வழக்கம் போல விமானம் மும்பை விமான நிலையத்திற்கு பத்திரமாக வந்து சேர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments