திருவொற்றியூர் கடலில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு..!

சென்னை திருவொற்றியூரில் கடலில் குளித்த போது ராட்ச அலையில் சிக்கி அண்ணன் - தம்பி உள்பட 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
கோடை வெப்பத்தை தணிப்பதற்காக சதானந்தபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான சந்துரு, அவரது தம்பியும் 10ம் வகுப்பு மாணவரான ஹரீஷ் மற்றும் அதேப்பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் திருச்சினாங்குப்பம் கடலில் செவ்வாய்க்கிழமை குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, உருவான ராட்சத அலையில் சிக்கிக் கொண்ட 3 பேரில், ஸ்ரீகாந்த், ஹரிஷ் ஆகிய இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தனர்.
தேடப்பட்டு வந்த சந்துருவின் சடலம் இன்று கரை ஒதுங்கியதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
Comments