தமிழகம் முழுவதும் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

0 734

தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையம் வனசரகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள உள் மண்டலம், வெளி மண்டலம் வனப்பகுதியில் நடைபெற்று வரும் யானைகள் கணக்கெடுப்பு பணியில் 228 வன ஊழியர்கள், 50 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உள்பட்ட 4 வனச்சரகங்களிலும் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 7 வனச்சரகங்கள், தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் வனத்துறையினர் பல குழுக்களாகப் பிரிந்து யானைகளை கணக்கெடுத்து வருகின்றனர்.

மேலும், வேட்டை தடுப்பு காவலர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் வனச்சரக அலுவலர்கள் ஆகியோரும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments