''மக்கள் செய்யும் தவறுகளில் ஒன்று விஷச்சாராயம் அருந்தியது'' - அமைச்சர் துரைமுருகன்

மக்கள் சில சமயங்களில் செய்யும் தவறுகளில் ஒன்று தான் விஷச்சாராயம் அருந்துவது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் காட்பாடியில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீடு மற்றும் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய துரைமுருகன், அரசு அதிகாரிகள் இறங்கி வேலை செய்தால் தான், நலத் திட்டங்கள் மக்களைப் போய்ச் சேரும் எனக்கூறினார்.
Comments