பள்ளி மாணவியை காதலித்த இளைஞர் கொடூர கொலை.. பெண்ணின் பெற்றோர் வெறிச்செயல்..?

0 2504

தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே பள்ளி மாணவியை காதலித்த இளைஞர் கழுத்து துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

வீரசின்னம்மாள் புரத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு முடித்த கமலேஸ்வரன், போடேந்திரபுரத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களின் காதல், இரு குடும்பத்தாருக்கும் தெரியவந்ததால் ஏற்பட்ட பிரச்சனையில், பெண்ணின் பெற்றோர் கமலேஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இருசக்கர வாகனத்தில் பூதிப்புரம் சென்ற கமலேஸ்வரன் வீடு திரும்பவில்லை என பெற்றோர்கள் பழனிசெட்டியபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், கல்லூரணி பகுதியில் கழுத்து வெட்டப்பட்டு கிடந்த கமலேஸ்வரனின் சடலத்தை கைப்பற்றினர்.

மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் பெற்றோர் கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments