பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவிற்கு ஆதரவு..? டெல்லி பயணத்தை ரத்து செய்த டி.கே.சிவகுமார்..

0 1931

கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதில் போட்டி நிலவும் சூழலில், பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 135 இடங்களில் வென்று காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மை பெற்றபோதிலும், முதலமைச்சர் யார் என்பதில் குழப்பம் நிலவுகிறது.

இந்நிலையில், கட்சி மேலிட அழைப்பை தொடர்ந்து சித்தராமைய்யா டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். டி.கே.சிவகுமாரும் டெல்லி செல்லவிருந்த நிலையில், பிறந்த நாள் கொண்டாடிய அவர், வயிற்று பிரச்சனை காரணமாக பயணத்தை ரத்து செய்ததாக அறிவித்துள்ளார்.

ஒக்காலிக்கா மற்றும் லிங்காயத் சமூகத்தின் ஆதரவு டி.கே.சிவக்குமாருக்கு உள்ள நிலையில், சுமார் 100 எம்எல்ஏக்கள் சித்தராமைய்யாவை ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments