ஆந்திராவில் கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

0 1029

ஆந்திராவில் அனந்தபுரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், திருப்பதி கோவிலுக்கு சென்று திரும்பிய 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒய்.எஸ்.ஆர். மாவட்டம் தாடி பத்ரி பகுதியைச் சேர்ந்த 12 பேர், திருப்பதி கோவிலுக்கு ஒரே காரில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை அனந்தபுரம்-சித்ராவதி நதி இடையே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது எதிரே வந்த லாரி மோதியதில், கார் உருக்குலைந்தது.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments