இந்திய விமானப்படையின் மிக்-21 போர் விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து - 2 பேர் பலி!

0 1808

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 போர் விமானம் ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் அருகே விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்த நிலையில், விமானியும், துணை விமானியும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். விமானிகள் இருவரும் பாராச்சூட் உதவியுடன் பத்திரமாக தரையிறங்கியுள்ளனர்.

சூரத்கரிலிருந்து புறப்பட்ட இந்த பயிற்சி விமானம், ஹனுமன்கர் மாவட்டத்தில் பஹ்லோல்நகரில் விபத்துக்குள்ளாகி வீடு ஒன்றின் மீது விழுந்ததில், வீட்டிலிருந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக, பஹ்லோல்நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments