கர்நாடகாவில், ஆறு வயது குழந்தைக்கு கூட மாநிலத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து தெரியும் - ராகுல் காந்தி!

0 1853

கர்நாடகாவில், ஆறு வயது குழந்தைக்கு கூட மாநிலத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து தெரியும் என ராகுல் காந்தி சாடியுள்ளார்.

அனேகல் பகுதியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், கர்நாடகாவில் அனைத்து இடத்திலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக குற்றம்சாட்டினார். எம்.எல்.ஏ. மகன் 8 கோடி ரூபாயுடன் சிக்கியதை நினைவுகூர்ந்த ராகுல், கர்நாடகத்தில் ஊழல் நடப்பது பிரதமர் மோடிக்கும் தெரியும் என்றார்.

மேலும் டபுள் என்ஜின் பொருத்தியுள்ளதாக கூறும் பிரதமர் எந்த என்ஜினில் எவ்வளவு கிடைத்தது என கூறுங்கள் என்றும் ராகுல் கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments