புல்வாமாவில் சுமார் 6 கிலோ எடையிலான வெடிபொருள் மீட்பு

புல்வாமாவில் சுமார் 6 கிலோ எடையிலான வெடிபொருள் மீட்பு
ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், சுமார் 6 கிலோ எடையுடைய வெடிபொருள் மீட்கப்பட்டதை அடுத்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஏற்கனவே ஒரு வழக்கில் கைதான பயங்கரவாதிகளின் கூட்டாளி ஒருவனிடம் நடத்திய விசாரணையில், வெடிபொருள் பதுக்கி வைத்திருந்த தகவல் தெரியவந்ததாகவும், Arigam பகுதியில் இருந்த வெடிபொருள் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ரஜெளரியில் ஆப்ரேஷன் திரிநேத்ராவின் கீழ் மூன்றாம் நாளாக பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments