இஸ்ரேலுக்காக கத்தார் நாட்டை உளவு பார்த்ததாக 8 இந்தியர்கள் கைது

0 2895

இஸ்ரேலுக்காக கத்தார் நாட்டை உளவு பார்த்ததாக 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

ரேடாரால் கண்காணிக்க முடியாத தொழில்நுட்பம் கொண்ட இத்தாலிய நீர்மூழ்கிக் கப்பலைப் பெறும் திட்டத்திற்கு ஆலோசனை வழங்கும் Dahra Global Technologies and Consulting Services நிறுவனத்திற்காக இவர்கள் பணியாற்றியதாகக்  கூறப்படுகிறது.

இரண்டாம் கட்ட விசாரணை இம்மாதம் நடைபெற இருப்பதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments