கர்நாடக சட்டமன்ற தேர்தல் - அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம்

0 1093

சட்டப்பேரவை தேர்தலையொட்டி கர்நாடகாவில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தும்கூருவில் அமித்ஷாவும், ராகுல் காந்தியும் பரப்புரை மேற்கொண்டனர்.

அந்நகரில் ஏராளமான பாஜகவினர் பங்கேற்புடன் பிரம்மாண்ட பேரணியில் அமித்ஷா ஈடுபட்டார். கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அடுத்தாண்டில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என அவர் தெரிவித்தார்.

தும்கூருவில் காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மாநில பாஜக அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு பதில், ஏழைகளின் பணத்தை கொள்ளைடித்ததாக கூறினார். இதனிடையே, தான் உரையாற்றியபோது இஸ்லாமியர்களின் தொழுகை ஒலி கேட்டதால் திடீரென ராகுல் காந்தி தனது பேச்சை நிறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments