சமந்தாவுக்கு சிலை வச்சாரு... பாவம் கஸ்தூரி மாதிரி இருக்கு... அவரே கண்பீயூஸ் ஆயிட்டாரு..!

0 3717
சமந்தாவுக்கு சிலை வச்சாரு... பாவம் கஸ்தூரி மாதிரி இருக்கு... அவரே கண்பீயூஸ் ஆயிட்டாரு..!

நடிகை சமந்தா மீது கொண்ட அதீத பக்தியால் ரசிகர் ஒருவர் வீட்டுக்குள் கோவில் கட்டி சிலை திறந்துள்ளார். சமந்தாவுக்கு வைத்த சிலை, நடிகை கஸ்தூரி போல இருப்பதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

மனைவி குழந்தைகளின் அனுமதியுடன் நடிகை சமந்தாவுக்கு வீட்டுக்குள் சிலை வைத்த சிந்தனை சிற்பி சந்தீப் இவர் தான்..!

தமிழ் தெலுங்கில் முன்னனி நாயகியாக வலம் வந்த நடிகை சமந்தா, நடிகர் நாகசைதன்யாவுடன் மண முறிவு ஏற்பட்ட பின்னர் புஷ்பா படத்தில் ஆடிய ஊம் சொல்றியா... பாடல் மூலம் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்தார்.

அண்மையில் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாமல் மருத்துவர் கண்காணிப்பில் இருந்த சமந்தா உடல் நலம் தேறி திருப்பி உள்ளார். இந்நிலையில் சமந்தா மீது கொண்ட அதீத பக்தியின் காரணமாக தீவிர ரசிகரான சந்தீப் என்பவர் ஆந்திர மாநிலம் குண்டூர் , அலப்பாடு கிராமத்தில் சமந்தாவுக்கு கோவில் ஒன்றை கட்டி உள்ளார்...

தான் வழங்கப்போகும் பிறந்தநாள் அன்பளிப்பை சமந்தா தன்னுடைய வாழ்நாளில் மறக்கவே கூடாது என்று தீவிரமாக சிந்தித்த சந்தீப், நண்பர்களுடன் நடத்திய ஆலோசனையின் பயனாய் சமந்தாவுக்கு கோவிலை கட்டியதாக தெரிவித்தார்.

அதன்படி சமந்தாவின் பிறந்த நாளையொட்டி சிலை திறப்பு விழாவுக்கு பேனர், அலங்காரம் என்று தடபுடலான ஏற்பாடுகளை செய்திருந்தார் சந்தீப்.

நீலத்துணியால் மூடியபடி கொண்டு வரப்பட்ட சமந்தாவின் சிலையை மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து திறந்து வைத்து வைத்த சந்தீப், சிலைக்கு ரோஜா இதழ்களை தூவி கையெடுத்து கும்பிட்டார். சுற்றி இருந்த ஒருவர் கூட அந்த சிலையை வணங்கவில்லை. மாறாக இது யாருடைய சிலை? என்று சந்தேகத்துடன் பார்த்தனர்

சமந்தா மாதிரி சிலைவைக்கப்பட்ட கோவில் முன்பு சமந்தா உருவப்படம் பொறித்த கேக்கை வெட்டி குடும்பத்தினருடன் சமந்தாவின் பிறந்த நாளை கொண்டாடிய சந்தீப், நயன்தாராவிற்கு அவருடைய ரசிகர்கள் கோவில் கட்டியது போல் தானும் சமந்தாவுக்கு கோவில் கட்டி சிலையை வைத்து பூஜை செய்வதாக வெட்கப்படாமல் தெரிவித்தார்.

அதே நேரத்தில் அந்த சிலையையும் அருகில் இருந்த சமந்தா புகைப்படத்தையும் பார்த்த நெட்டிசன்கள் , சமந்தாவுக்காக வைக்கப்பட்ட சிலை, நடிகை கஸ்தூரியை போல இருப்பதாக கமெண்ட் அடித்ததால் சந்தீப் நொந்து போயுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments