கென்யாவில் மக்களின் மொத்த இறப்புக்குக் காரணமான மற்றொரு மதபோதகர் கைது

0 1049

கென்யாவில் தன்னைப் பின்பற்றியவர்களை மொத்தமாக உயிரிழக்க வைக்க காரணமாக இருந்ததாக மற்றுமொரு மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நாட்டின் தென்கிழக்கு நகரமாகிய மாவுவெனி என்ற இடத்தைச் சேர்ந்த மதபோதகர் எஸிகியல் ஒடிரோ. இவர், தான் பணியாற்றிய தேவாலயத்தில் 100க்கும் மேற்பட்டவர்களை அடைத்து வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர் கிதுரே கிண்டிகி, மதபோதகர் எஸிகியல் பணியாற்றிய தேவாலயத்தில் மரணங்கள் நிகழ்ந்ததாக வந்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஏற்கனவே இறைவனைச் சந்திப்பதற்காக பட்டினியாய் கிடக்க வேண்டும் என்று கூறிய மதபோதகரின் பேச்சைக் கேட்டு உயிரிழந்ததாக 98 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments