விமானத்தில் சிகரெட் பிடித்து அவசர நிலையை ஏற்படுத்திய துணை விமானி பணி நீக்கம்

0 1487

சீனாவில் ஏர் சைனா விமானத்தில் சிகரெட் பிடித்து அவசர நிலையை ஏற்படுத்திய துணை விமானி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய் அன்று ஹாங்காங்கில் இருந்து டலியான் பகுதிக்குச் சென்ற ஏர் சைனா விமானத்தில் சுவாசிக்க போதிய காற்று கிடைக்காமல் பயணிகள் அவதியுற்றனர். உடனடியாக அவர்களுக்கு ஆக்சிஜன் மாஸ்க் கொடுக்கப்பட வேண்டிய அவசர நிலை ஏற்பட்டது. மிக அதிக உயரத்தில் பறப்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டதாகக் கருதி விமானம் அவசர அவசரமாக கிட்டத்தட்ட 10 ஆயிரம் அடி கீழ் நோக்கி இயக்கப்பட்டது.   

விசாரணையில், சிகரெட் புகைத்த துணை விமானி, அந்த புகை பயணிகள் உள்ள கேபினுக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக வென்டிலேட்டரின் இயக்கத்தை நிறுத்தியது தெரியவந்தது. விமானத்தில் புகை பிடிக்கக் கூடாது என்ற விதியை மீறியதோடு வென்டிலேட்டரை நிறுத்திய துணை விமானி சீன உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிர்வாக உத்தரவின் பேரில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments