கடினமான சூழலிலும் புதுமைகளை உருவாக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது - பிரதமர்

0 616

கடினமான சூழலிலும், புதுமைகளை படைக்கும் ஆற்றல் இந்தியாவிற்கு உள்ளதாக செளராஷ்டிரா - தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

குஜராத்தில் நடைபெற்ற செளராஷ்டிரா - தமிழ் சங்கமத்தின் நிறைவு விழாவில் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி சிறைப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைவரும் ஒருங்கிணைந்து கலாச்சார மோதல்களை கைவிட்டு, நல்லிணக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறினார்.

இந்த சங்கமம் சர்தார் படேலுக்கும், சுப்பிரமணிய பாரதிக்கும் உள்ள சங்கமம் என்றும், நர்மதை - வைகை நதிக்களுக்கு இடையேயான சங்கமம் என்றும் குறிப்பிட்டார்.

பின்னர், சோம்நாத் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின், சௌராஷ்டிரா - தமிழ் சங்கம் பிரஷஸ்தி புத்தகத்தை பிரதமர் வெளியிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments