அரசு மருத்துவமனையில், உதவுவது போல நடித்து பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம்குழந்தையைக் கடத்திய பெண்..!

0 1188

திருப்பூர் அரசு மருத்துவமனையில் உதவி செய்வதுபோல் நடித்து, பச்சிளம் குழந்தையை கடத்திய பெண் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஒடிசாவை சேர்ந்த அர்ஜூன்குமார் - கமலினி தம்பதி, பல்லடம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரசவத்திற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலினுக்கு, கடந்த 22ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அதே வார்டில் சிகிச்சைபெற்றுவந்த வேறு ஒரு பெண்ணுக்கு உதவியாக இருந்த உமா என்ற பெண், கமலினிக்கும் உதவிசெய்வதுபோல நடித்து, குழந்தையை கடத்திச் சென்று விட்டார்.

சிகிச்சை பெற்றுவந்த பெண்ணும் மாயமானதால், இதுகுறித்து தம்பதியினர் போலீசில் புகாரளித்தனர். மருத்துவமனை பதிவேட்டிலிருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்புகொண்டபோது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்ததா ல், சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி அப்பெண்ணை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments