''எங்கள் நிறுவனம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை..'' - ஜி ஸ்கொயர்..!

0 51524

தங்கள் நிறுவனம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவதூறு பரப்பும் வகையில் கூறப்பட்டவை என்றும் குறிப்பிட்டு அண்ணாமலைக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தங்களது நிறுவனம் திமுகவின் முதல் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமானதோ, அவர்களின் கட்டுப்பாட்டிலோ இல்லை என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் தங்களது சொத்து மதிப்பும் அண்ணாமலை கூறியபடி 38 ஆயிரம் கோடி ரூபாய் இல்லை என்றும் முறையான ஆய்வு செய்தால் அவர் கூறிய குற்றச்சாட்டுகள் பொய் என்பது தெரியவரும் என்றும் ஜி ஸ்கொயர் விளக்கமளித்துள்ளது.

நிலத்தின் மதிப்பு தொடர்பான விவரங்களை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஜி ஸ்கொயர் நிறுவனம், அது அண்ணாமலை சுட்டிக்காட்டிய மதிப்பில் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

உண்மை நிலவரத்தை புரிந்துகொள்ள மேலும் முறையான விளக்கங்களையும் தகவல்களையும் தர தயாராக உள்ளதாகவும் அண்ணாமலைக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments