பாகிஸ்தானில் உயிருக்குப் போராடிய ஆப்பிரிக்க பெண் யானை உயிரிழப்பு

பாகிஸ்தானில் உயிருக்குப் போராடிய ஆப்பிரிக்க பெண் யானை உயிரிழப்பு
பாகிஸ்தானில் நோய்வாய்பட்டு உயிருக்குப் போராடிய ஆப்பிரிக்க யானை உயிரிழந்தது.
17 வயதான நூர்ஜஹான் எனப் பெயரிடப்பட்ட அந்த யானைக்கு கட்டி ஏற்பட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, படுத்த படுக்கையாகிக் கிடந்த நூர்ஜஹானை கருணைக் கொலை செய்ய வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த யானையின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், மாலை நேரத்தில் நூர்ஜஹான் உயிரிழந்தது. பாகிஸ்தானில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள உயிரினங்கள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Comments