தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்... ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட இஸ்லாமியர்கள்

தமிழகம் முழுவதும் புனித ரம்ஜான் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சை கீழவாசல் அறிஞர் அண்ணா திருமண திடலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி தொழுகை நடத்தினர். தொழுகை முடித்த பிறகு ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி, கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
கோவையில் உக்கடம், கரும்புக்கடை, கோட்டைமேடு, போத்தனூர், குனியமுத்தூர், சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்தினர்.
இதேபோல விழுப்புரம், கன்னியாகுமரி, கரூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
Comments