ஐஸ்வர்யா ராய் மகள் உடல்நலம் குறித்த 'வீடியோ'க்களை நீக்க கூகுள் நிறுவனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

0 3631

ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா உடல்நிலை தொடர்பான ஆட்சேபனைக்குரிய வீடியோ பதிவை, யூ-டியுப்பிலிருந்து நீக்கும்படி 'கூகுள்' நிறுவனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதியரின் 11 வயதான பெண் குழந்தையான ஆராத்யா பச்சன், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வருவதாக யு-டியூப்பில் சிலர் வீடியோக்களை பதிவேற்றம் செய்தனர்.

இதை எதிர்த்து ஆராத்யா, அவரது தந்தை அபிஷேக் சார்பில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆராத்யா பச்சன் உடல்நலம் குறித்த வீடியோக்களை யூ-டியுப்பிலி ருந்து உடனடியாக நீக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

மேலும், ஒரு குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments