"வேற்றுகிரகவாசிகள் குறித்த நம்பகமான ஆதாரங்கள் ஏதுமில்லை" அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவிப்பு..!

0 1206

வேற்றுகிரகவாசிகள் குறித்த நம்பகமான ஆதாரங்கள் ஏதுமில்லை என்ற போதிலும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் தொடர்பான 650 வழக்குகளை விசாரித்து வருவதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய பென்டகன் அதிகாரி சீன்கிர்க்பேட்ரிக், வேற்றுகிரகவாசிகள் தொடர்பாக எந்த ஒரு வலுவான ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான செயல்பாடுகள் குறித்த பதிவுகள் மிக மிக குறைந்த அளவிலேயே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வேற்றுகிரகவாசிகள் தொடர்பான ஏதேனும் நம்பகத்தன்மை உடைய ஆதாரங்கள் கிடைத்தால் மக்கள் அதனை பென்டகனுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என சீன் கிர்க்பேட்ரிக் கேட்டுகொண்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் எல்லாம் அறிவியல் சான்றுகள் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments