காதல் தகராறில் தாக்குதல் : ஐடிஐ மாணவர் அடித்துக் கொலை

0 1693
கரூர் மாவட்டம் அய்யர்மலையில் காதல் விவகாரத்தில் உண்டான மோதலில் ஐடிஐ மாணவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் அய்யர்மலையில் காதல் விவகாரத்தில் உண்டான மோதலில் ஐடிஐ மாணவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

அய்யர்மலை அரசுக் கல்லூரியில் படித்து வரும் கணக்கப்பிள்ளையூரைச் சேர்ந்த குருபிரகாஷ், மாணவி ஒருவரை காதலித்துள்ளார். அந்த மாணவியோ ஆட்டோ ஓட்டுநர் அருண்குமாரை காதலித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான முன்விரோதத்தில் மாணவர் குருபிரகாஷை, ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார்  கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிமறித்து தாக்கி உள்ளார். இதனை தடுக்கச் சென்ற குருபிரகாசின் உறவினரான ஐடிஐ மாணவர் விக்னேஷையும் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

பலத்த காயங்களுடன் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷ் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக அருண்குமார், கல்லூரி மாணவர்கள் செல்லத்துரை, விஜய், சரவணன், சந்தோஷ்குமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments