இந்தியாவில் முதல் விற்பனையகத்தை திறந்தது ஆப்பிள் நிறுவனம்

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் நேரடி விற்பனையகத்தை மும்பையில் திறந்துள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் நேரடி விற்பனையகத்தை மும்பையில் திறந்துள்ளது.
மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் ஆப்பிள் நேரடி விற்பனையகத்தை, அதன் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், திறந்து வைத்தார். நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள், டிம் குக் உடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
மும்பை ஆப்பிள் விற்பனையகம், நூறு சதவீதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கொண்டு செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20-ம் தேதி, இரண்டாவது ஆப்பிள் விற்பனையகம் டெல்லியில் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments