குடிபோதையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி..!

தமிழ்நாட்டில் குடிபோதையால் நிகழும் கொடுமைகளின் தொடர்ச்சியாக, சேலத்தில் குடிவெறி அதிகமாகிப் போன இளைஞர் ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளார்.
டைல்ஸ் பாலிஷ் போடும் தொழிலாளியான சதீஷ்குமார் என்ற அந்நபர், சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சின்னஅம்மாபாளையத்தைச் சேர்ந்தவர்.
குடிப்பழக்கம் அதிகமாகிப் போனதால் ஐந்து ஆண்டுகளுக்கு முன், தங்கள் குழந்தைகள் மூன்று பேரை அழைத்துக் கொண்டு சதீஷ் குமாரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது.
அதன் பின் சதீஷ் குமார் மேலும் அதிகமாக குடித்து வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். இந்த போதை அதிகமாகி ஞாயிறு இரவு, தான் தங்கி இருந்த வீட்டின் மாடியில் இருந்து சதீஷ் குமார் கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சதீஷ் குமார் தற்கொலை செய்யும் நோக்கத்தில் குதித்தாரா என்பது பற்றியும் அதற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments